அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் தனது 28வது கல்வியாண்டில் கால்பதித்துள்ள இவ் வேளையில்....

  • மாணவர்களின் தமிழ்மொழித் திறன்களை வெளிக்கொணரவும்
  • தமிழ்மொழியில் படைப்பாற்றல் திறனை வளர்க்கவும்

முதற்தடவையாக நோர்வேரீதியாக அனைத்து அன்னை வளாகங்களையும் இணைத்து அன்னை தலைமை நிர்வாகம் அன்னைத் தமிழ்முற்றப் போட்டியினை நடத்தவுள்ளது என்ற செய்தி, நோர்வே வாழ் அனைத்துத் தமிழர்களுக்கும் ஓர் உவகையான செய்தியாக உயர்ந்து நிற்கின்றது.

 மேலும், சில போட்டிகள் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் தற்போது கல்வி கற்காத பழைய மாணவரையும் மற்றும் ஏனையோரையும் இணைக்கும் நோக்கத்தையும் கொண்டதாக அமைகின்றது என்பதையும் மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.

அனைத்துப் போட்டிகளும் 2020ஆம் ஆண்டில் நடைபெறும். இப்போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைவரினதும் ஒத்துழைப்பினையும், ஆலோசனைகளையும்  அன்னை தமிழ்முற்றப் போட்டிக்குழு வேண்டி நிற்கின்றது.

இப்போட்டிகளைத் திறம்பட நடத்தும் நோக்கோடு (7 பேர் கொண்ட) அமைக்கப்பட்ட போட்டிக்  குழுவினர் கடந்த சில மாதங்களாக எடுத்த முன்முயற்சியின் பெறுபேறுகளைத் தற்போது தங்கள் முன் வைத்து, தங்கள் கருத்துக்களையும், ஆரோக்கியமான விமர்சனங்களையும் எதிர்பார்த்து  நிற்கின்றனர்.

ஆசிரியப் பெருந்தகைகள், நிர்வாகத்தினர், பெற்றோர், மாணவர்கள், நலன் விரும்பிகள் மற்றும்  தமிழ் ஆர்வலர்கள்  அனைவரினதும் கூட்டு முயற்சியே இப்புதிய முயற்சியின் முதுகெலும்பாக (பக்கபலமாக) இருக்கும் என்பதையும் இத்தருணத்தில் பெருமையோடு கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

 

இவ்வண்ணம்:

அன்னைத் தமிழ்முற்ற போட்டிக் குழுவினர்.